தமிழகத்தில் ஆசிரியர் பயிற்றுநர் காலிப்பணியிடங்கள் – ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 19, 2021

Comments:0

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்றுநர் காலிப்பணியிடங்கள் – ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை!

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்றுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் பள்ளிக் கல்வி ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர்கள் கோரிக்கை:

தமிழகத்தில் கல்வியலில் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்றுநர்கள் பற்றாக்குறையால் கல்வி நிலை பாதிப்படைந்துள்ளது. ஒரு சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது ஆசிரியர் பயிற்றுநர்களின் தலையாய கடமையாகும். தமிழகத்தில் ஆசிரியர் பணிகளை போலவே ஆசிரியர் பயிற்றுநர்களும் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் விருப்ப ஓய்வு, பணி நிறைவு, இறப்பு போன்ற காரணங்களால் மாநிலம் முழுவதும் ஆசிரியர் பயிற்றுநர் காலிப்பணியிடங்கள் உள்ளது.

அதனால் பள்ளித்தர மேம்பாட்டுக்காக ஆசிரியர் பயிற்றுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தினர் பள்ளிக்கல்வி ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் 2014 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பணியிட மாறுதல் கலந்தாய்வில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களது குறைகளை களைந்திட வேண்டும், புதிய நடைமுறைகளை அமலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களை சேகரித்து அறிவிக்க வேண்டும், தகுதி அடிப்படையில் பணிகளை வழங்க வேண்டும். பள்ளித்தர மேம்பாட்டை வளப்படுத்தும் வகையில், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஊதியத்தை உயர்த்த வேண்டும். ஆசிரியர் பயிற்றுநர்களின் விவரங்களையும் கருவூலத் துறையின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை முறைமையில் இணைத்திட வேண்டும் என்று பள்ளிக்கல்வி செயலர், மாநில திட்ட இயக்குநர், துணைத் திட்ட இயக்குநர் ஆகியோரிடம் ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews