Breaking

Monday, July 05, 2021

அஞ்சல் முகவர் வேலைவாய்ப்பு – ஜூலை 9ம் தேதி நேர்முகத் தேர்வு !!

தமிழகத்தில் சென்னை தாம்பரம் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல், கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு, 9ம் தேதி நடக்கிறது என்று அஞ்சல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அஞ்சல் துறை :
தமிழகத்தில் அரசு மக்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து அரசு பணிகளுக்கும் தேர்வு நடைபெறும் அதனை மதிப்பீட்டை பணிகள் வழங்கபடுகிறது. சில பணிகளுக்கு நேரடியாக நேர்முக தேர்வுகளை நடத்தி சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள். தற்போது தமிழக அஞ்சல் துறையில் அஞ்சல் முகவர் பணிக்கு நேர்முக தேர்வு நடைபெறவுள்ளது.

! அதன்படி சென்னை, தாம்பரம் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல், கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய முகவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தற்போது இந்த பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியும் விருப்பமும் உடையோர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. அஞ்சல் முகவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். சுய தொழில் செய்பவர்கள், வேலையில்லா இளைஞர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம் எனவும் கல்வி தகுதி சான்றிதழ் வயது சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் முகவர் நேர்முகத்தேர்வு தாம்பரம் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் ஜூலை 9ம் தேதி காலை 11:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog