தமிழகத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் நெறிமுறைகளை குறித்து இந்த பதிவில் காண்போம்.
உதவித்தொகை:
தமிழகத்தில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பல ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு மக்களுக்கு உதவும் விதமாக பல உதவும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதேபோல், படித்து விட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கும் தமிழக அரசு உதவி தொகை வழங்கி வருகின்றது. தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் ஆண்டு தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதி பதிவு செய்யப்படுகிறது. பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலானவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் 2021 ஜூன் 30ம் தேதி வரை புதுப்பித்தவர்கள் நடப்பு ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதேபோல், மாற்றுத்திறனாளிகள் வாரியத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவடைந்தவர்களும் உதவித்தொகை பெறலாம். இதற்கு அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.75,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும். பயனாளிகள் தமிழகத்தில் கல்வி பயின்றவர்களாக இருக்க வேண்டும். வேறு எந்த பணியிலும் ஈடுபடாதவராகவும், உதவித்தொகை பெறாதவராகவும் இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி சென்று படிக்காதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் கல்வித்தகுதி சான்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.