Breaking

Tuesday, July 14, 2026

6 முதல் 12ஆம் வகுப்பு வரை உடற்கல்வி இனி கட்டாயம்! ஆசிரியர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள்

6 முதல் 12ஆம் வகுப்பு வரை உடற்கல்வி இனி கட்டாயம்! ஆசிரியர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள்

6 முதல் 12ஆம் வகுப்பு வரை உடற்கல்வி இனி கட்டாயம்! ஆசிரியர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள்

தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி (Physical Education) வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, உடற்கல்வி ஆசிரியர்களுக்காக புதிய ஆசிரியர் வளநூல்கள் (Teacher Resource Books) மற்றும் பாடப்புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை தயாரித்து வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி வகுப்புகள் திட்டமிட்ட முறையில் நடைபெறுவதையும், ஒரே மாதிரியான கற்பித்தல் நடைமுறையை உறுதி செய்வதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த கல்வியாண்டில் பல பள்ளிகளில், குறிப்பாக சில தனியார் பள்ளிகளில், உடற்கல்வி நேரங்கள் கூடுதல் பாட வகுப்புகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 2026–27 கல்வியாண்டு முதல் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான புதிய வளநூல்கள்

உடற்கல்வி வகுப்புகளை தரமான முறையில் நடத்துவதற்காக, வகுப்பு வாரியான ஆசிரியர் வளநூல்கள் மற்றும் பாட வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் உடற்பயிற்சி, விளையாட்டு திறன் மேம்பாடு, உடல்நலம், உடற்தகுதி மதிப்பீடு, மாணவர்களின் வயதுக்கேற்ற பயிற்சி முறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றன. இந்த வளநூல்கள் மூலம் மாநிலம் முழுவதும் ஒரே தரத்தில் உடற்கல்வி கற்பிக்க முடியும் என்று கல்வித்துறை எதிர்பார்க்கிறது.

ஏன் இந்த நடவடிக்கை?

மாணவர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்விச் சாதனைகளுடன் உடல் தகுதியும் முக்கியம் என்பதால், பள்ளி நேர அட்டவணையில் ஒதுக்கப்பட்ட உடற்கல்வி நேரத்தை வேறு பாடங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.

உடற்கல்வி நேரத்தை மற்ற பாடங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.

விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பள்ளி நேரத்திற்குப் பிறகும் சிறப்புப் பயிற்சி வழங்க வேண்டும்.

பயன்படுத்தப்படாமல் இருக்கும் விளையாட்டு மைதானங்கள் குறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சாதனை படைக்கும் பள்ளிகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு என்ன பயன்?

இந்த நடவடிக்கையின் மூலம் மாணவர்கள் தினசரி உடற்பயிற்சி, விளையாட்டு ஒழுக்கம், குழு ஒருங்கிணைப்பு, தலைமைத்துவம் மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், திறமையான விளையாட்டு வீரர்களை பள்ளி நிலையிலேயே அடையாளம் கண்டு, மாநில மற்றும் தேசிய போட்டிகளுக்கு தயார்படுத்தவும் இந்த முயற்சி உதவும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

பள்ளிகள் கவனிக்க வேண்டியது

பள்ளி நிர்வாகங்கள் உடற்கல்வி நேர அட்டவணையை முறையாகப் பின்பற்ற வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் புதிய வளநூல்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மைதான வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, பள்ளிகளில் உடற்கல்விக்கு புதிய முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் என்று கல்வி வட்டாரங்கள் கருதுகின்றன. உடற்கல்வியை ஒரு துணைப் பாடமாக அல்லாமல், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான அத்தியாவசிய கற்றல் கூறாக மாற்றும் முயற்சியாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது


அரசுப் பள்ளிகளில் 6-10ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உடற்கல்வி பாடப்புத்தகங்கள் Physical education textbooks for teachers of classes 6–10 in government schools.

அரசுப் பள்ளிகளில் 6-10ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உடற்கல்வி பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக உடற்கல்வி பாடப் புத்தகங்கள் கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் PDF கோப்பாக வெளியிடப்பட்டன. தற்போது மாணவர்களுக்கு வழங்க உடற்கல்வி பாடப்புத்தகங்களாக இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சியின் கீழ், விளையாட்டு சாதனங்களின் பயன்பாடு, உடற்தகுதி, யோகா, மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய தனித்தனி கையேடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புத்தகங்களின் சிறப்பம்சங்கள்:

வகுப்பு வாரியான பக்கங்கள்: 6 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு தலா 33 பக்கங்களும், 7-ஆம் வகுப்புக்கு 60 பக்கங்களும், 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளுக்கு தலா 50 பக்கங்களும் கொண்ட புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நோக்கம்:

மாணவர்களின் உடல்திறனை மேம்படுத்துவதோடு, விளையாட்டுத் திறன், நன்னடத்தை மற்றும் மனநலனை வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.செயல்படுத்தும் முறை: பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இப்பொழுது இந்தப் புத்தகங்கள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவியருக்கு முதன்முறையாக உடற்கல்விக்கான பாடப்புத்தகத்தை பள்ளிக் கல்வித்துறை அச்சிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளிப் பாடவேளைகளில் விளையாட்டுக் கல்வியும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றல் மிக்க உடற்கல்வித் திட்டத்தையும் தொடங்கியுள்ளது.

இந்த முன்முயற்சி மாணவர்களின் உடல் தகுதியை அதிகரிப்பது நற்பண்புகளை உருவாக்குவது, சமூகத் திறன்களை மேம்படுத்துவதோடு அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுத்திப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோவிட் தொற்று நோய் காலத்திலும் அதைத தொடர்ந்தும் நிலவிய கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

அப்போது உடற்பயிற்சி திடல்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் மாணவ, மாணவியரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது. இந்த நிலையை மாற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு முறையான உடற்கல்விப் பாடத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தற்போதைய நடைமுறைகளுக்கு ஏற்ப 21ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் வளமான மாணவர்களை உருவாக்குவதற்கான ஒரு முன்முயற்சியாகவும் இந்த திட்டம் அமைந்துள்ளது. தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் கலைத் திட்டம் வடிவமைக்கப்பட்டத்தின் கீழ், மாணவர்கள் வளமான பண்பாடு, மரபு, வரலாறு , கலை , அறிவியல், கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை புரிந்துகொண்டு அவற்றின் பெருமைகளை போற்ற வேண்டும். இவற்றை கவனத்தில் கொண்டு மாணவர்களின் உடல் மற்றும் அறிவாற்றல் திறன்களின் ஒட்டுமொத்த வளச்சியில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. நமது பண்பாடு மற்றும் மரபு குறித்த அவர்களின் மதிப்பு மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதற்கு உதவும் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள் இந்த திட்டத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயர்நிலை வகுப்பு மாணவர்களிடையே நுண்தசை இயக்கத் திறனும் ஹார்மோன்கள் மாற்றமும் ஏற்படும் நிலையில் இந்த பருவத்தில் நரம்புத்தசை ஒருங்கிணைப்பு மற்றும் அடிப்படை திறன்களை மாணவர்களிடம் மேம்பாடு அடையச் செய்யவும் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பற்றிய விழப்புணர்வை ஏற்படுத்தவும், உடற்கல்வி அறிவு, உடல் வளர்ச்சி, விளையாட்டு கல்வி, தமிழ்நாட்டுப்புற விளையாட்டுகள், மனமகிழ் விளையாட்டுகள், விளையாட்டுப் போட்டிகள், திட்டங்கள், ஆசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், விளையாட்டு காயங்கள், பாதுகாப்பு கல்வி மற்றும் விளையாட்டுகளில் தொழில் வாய்ப்பு ஆகிய சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகின்றன.

இதுதவிர மாணவர்கள் மாநில மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கவும், பதக்கங்களை வெல்லவும், சாதனை உணர்வை மேம்படுத்தவும் தங்களின் உடன் வலிமையை எண்ணி பெருமை கொள்ளவும் இந்த திட்டம் வழிவகுக்கும்.

மேலும், மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இந்த திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதையடுத்து, 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு உடற்கல்வி பாடங்கள் இணைக்கப்படுகின்றன. இதற்காக, பாடப்புத்தகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வி ஆண்டில் இந்த பாடப்புத்தகங்கள் பள்ளிகளில் பாடங்களாக நடத்தப்பட உள்ளன. இந்த பாடப்புத்தகம் ஒரே புத்தகமாக அச்சிடப்பட்டுள்ள நிலையில் 33 பக்கங்கள் 6ம் வகுப்புக்கும், 60 பக்கங்கள் 7ம் வகுப்புகளுக்கும், 50 பக்கங்கள் 8ம் வகுப்புக்கும், 50 பக்கங்கள் 9ம் வகுப்புக்கும், 33 பக்கங்கள் 10ம் வகுப்புக்கும் பாடங்களாக இடம்பெற்றுள்ளன. இவை தவிர மதிப்பீட்டு கூறுகள், கற்றல் விளைவுகள், உள்ளிட்டவையும் இந்த பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog