Result link Click Here தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தொடர்பாக மாவட்ட ஆதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி வருகிறார்.
12 ஆம் வகுப்பு மதிப்பெண்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது சிரமம் என்பதால் அனைவருக்கும் தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி என குறிப்பிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. Result link Click Here 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் எவ்வாறு தயாரிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை குழு அமைக்கப்பட்டு அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர உத்தரவிட்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசு தேர்வுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைவாக உள்ள காரணத்தால் பள்ளிகளை திறக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர். TN Job “FB Group” Join Now இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதன் பின்னர் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், அனைத்து கல்வி அதிகாரிகளுடன், சென்னை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் முடிவில் பள்ளிகள் திறப்பது, மாணவர்கள் நலன் சார்ந்த விஷயங்கள் தொடர்பாகவும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
Result link Click Here
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.