தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ள நிலையில், இது குறித்து முதல்வரின் முடிவு இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால் ஹரியானா, தெலுங்கானா மற்றும் சண்டிகர் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்திலும் மீண்டும் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை சங்கத்தின் தலைவர் பி.டி.அரசகுமார் சந்தித்தார். இவர்களின் சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதியாக ஒரு கோடியே இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அதன் பின்னர், பி.டி.அரசகுமார் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு காலையிலும், உயர்நிலை வகுப்புகளுக்கு மதியமும் வகுப்புகள் நடத்தலாம் அல்லது மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் மாற்று நாட்களில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும், மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்கள் வேறு பள்ளியில் சேர்க்கப்படுவதை அரசு தடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயம் தொடர்பான குழுவையும் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.