Breaking

Friday, July 16, 2021

ஜுலை 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் விவரங்கள் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்கக செய்திக்குறிப்பு

ஜுலை 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் விவரங்கள் வெளியீடு!
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, 2020-2021

தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

செய்திக்குறிப்பு (நிலை)

எண்.105 பள்ளிக் கல்வித் (அ.தே) துறை, நாள்.12.07.2021-ன்படி, 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், 19.07.2021 அன்று காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். 1. www.tnresults.nic.in 2.www.dge1.tn.nic.in

3. www.dge2.tn.nic.in

4. www.dge.tn.gov.in
மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், பள்ளி மாணவர்கள் 22.07.2021 அன்று காலை 11.00 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண்

பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இடம்: சென்னை-6 நாள்: 16.07.2021.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog