அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் சேர்க்கை – ஜூலை 12 வரை விண்ணப்ப பதிவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 03, 2021

Comments:0

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் சேர்க்கை – ஜூலை 12 வரை விண்ணப்ப பதிவு!

தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான பாலிடெக்னிக் படிப்பின் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. ஜூலை 12ம் தேதி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை:
10ம் வகுப்புக்குப் பிறகு விரைவாக வேலைகளில் சேர விரும்பும் மாணவர்கள் பாலிடெக்னிக் படிப்புகளை தேர்ந்தெடுக்கின்றனர். பாலிடெக்னிக் கல்விக்கு குறைந்த செலவுகளே ஏற்படும். மேற்படிப்புகளை தொடர முடியாதவர்கள் மதிப்பெண்கள் குறைவால் 11ம் வகுப்பில் வேண்டிய பாட பிரிவில் சேர முடியாதவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளை தேர்ந்தெடுத்து அதிகபட்சம் 2 ஆண்டுகள் கல்வி பயில்கின்றனர். பிறகு தொழில் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்கின்றனர். பாலிடெக்னிக் படிப்பை முடித்தவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம் மற்றும் குறைந்த செலவில் அவற்றை முடிக்க முடியும். பாலிடெக்னிக் படிப்புகள் அதிக தொழில் நோக்கம் கொண்டவை. படிக்கும் போதே இலவச தொழில் பயிற்சியையும் மாணவர்கள் பெறுகின்றனர். தற்போது காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 2021-22ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. ஜூலை 12 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கல்வி கட்டணமாக 2,122 ரூபாய் பெறப்படுகிறது. மேலும் www.tngptc.in அல்லது www.tngptc.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்தி விண்ணப்பிக்கலாம் எனவும் பட்டியல் இன மாணவர்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் போன்ற பாடப்பிரிவுகள் இரண்டு சுழற்சிகளிலும், கணிப்பொறியியல் ஒரு சுழற்சியிலும் மாணவர்கள் சேரலாம் என காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews