புதுச்சேரி பல்கலைக்கழகங்களுக்கு கீழ் செயல்படும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தேர்வுகளுக்கு மாற்றாக தற்போது திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
கடந்த வருடம் முதல் கொரோனா பரவல் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை இந்த நோய் பரவலின் தாக்கம் இருந்து வருவதால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வருகின்றது. இதனை அடுத்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதமே தேர்வுகள் நடத்தப்பட இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை 5 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற இருக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டதால் மாணவர்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடத்தப்பட வேண்டிய தேர்வுகளை ஜூலை 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலும் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடத்தப்பட வேண்டிய தேர்வுகளை ஜூலை 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலும் மே 4ஆம் தேதி நடத்த வேண்டிய தேர்வை ஜூலை 17ஆம் தேதியன்று நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அந்தமான் தீவுகளில் உள்ள கல்லூரிகளுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் அங்கு ஜூலை 26 ஆம் தேதி முதல் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை குறித்து தெரிந்து கொள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pondiuni.edu.in சென்று தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.