தமிழக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பித்தல் – செப்டம்பர் 25 வரை காலக்கெடு!
தமிழகத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுகளை புதுப்பிக்க செப்டம்பர் 25 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான சேவைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதிவு புதுப்பித்தல்
தமிழகத்தில் அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் தகுதியுடைய நபர்கள், தங்களது சுய விண்ணப்ப விவரங்களை கல்வித்தகுதியுடன் சேர்த்து அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அந்த வகையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு பணி நியமனத்தின் போது முன்னுரிமை வழங்கப்படும். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்னாள் படைவீரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணிகளை மேற்கொள்ளலாம் என கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’தமிழக அரசின் முன்னாள் படைவீரர் நல அலுவலக வேலைவாய்ப்பு பிரிவில், அரசு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 தேதி முதல் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை விண்ணப்பப்பதிவை புதுப்பிக்க தவறியவர்கள், தங்களது பதிவுகளை தற்போது புதுப்பித்து கொள்ளலாம். அதாவது மத்திய, மாநில அரசுத்துறையில் மறு வேலை வாய்ப்பில்லாத முன்னாள் படைவீரர்கள், தங்களிடம் உள்ள அசல் வேலைவாய்ப்பு பதிவு அட்டையை வைத்து மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்திலோ அல்லது தபால் மூலமாகவோ புதுப்பித்துக்கொள்ளலாம். இப்பதிவினை, வரும் செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். தவிர கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ, ஆன்லைன் மூலமாகவும் புதுப்பிக்கலாம். இந்த சலுகை வரும் செப்டம்பர் 25 க்கு மேல் நீட்டிக்கப்படாது என்பதால், இவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.