பிரபலமான நபர்களின் ட்விட்டர் கணக்கில் பின் தொடர்பாளர்கள் (பாலோவர்ஸ்) எண்ணிக்கை திடீரென குறைந்தன. இதனால் பயனாளர்கள் குழப்பம் அடைந்தனர். இது குறித்து ட்விட்டர் நிறுவனம் தற்போது விளக்கமளித்துள்ளது.
ட்விட்டர் விளக்கம்:
ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருப்போரின் பாலோயர்ஸ் எண்ணிக்கை திடீரென குறைந்து வந்தது. பாலிவுட் நடிகர் அனுபம் கேர் மற்றும் பத்திரிக்கையாளர் ரிச்சார் கேர் ஆகியோரின் ட்விட்டர் பின் தொடர்பாளர்கள் குறைந்தன. இது போல் நிறைய நபர்களின் ட்விட்டர் பாலோவர்ஸ் குறைந்தன. இதன் காரணம் தெரியாமல் ட்விட்டர் பயனாளர்கள் குழப்பம் அடைந்தனர். ட்விட்டர் நிறுவனம் இது குறித்து தெளிவாக விளக்கமளித்துள்ளது. அதன்படி ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகளை வைத்திருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக மொபைல் எண் மற்றும் மெயில் ஐடிகளை சரிபார்க்க பயனாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதை பின்பற்றி கணக்கை சரி செய்தவர்கள் மட்டுமே தொடர்ந்து ட்விட்டரில் கணக்கு வைத்திருக்க முடியும். இல்லையெனில் கணக்குகள் முடக்கப்படும். போலி அக்கவுண்ட்களை தவிர்க்கவும், தவறான நபர்கள் ட்விட்டரில் செயல்படுவதை தடுக்க இந்த நடைமுறையை பின்பற்றுவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் அப்டேட்களை செய்யாத கணக்குகள் செயல்படாதவை என தீர்மானிக்கப்பட்டு முடக்கம் செய்யப்படும். ட்விட்டர் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சில மாற்றங்களை செய்து கொண்டே இருக்கும். ட்விட்டரின் எஸ்.எம்.எஸ் வசதிகளை பயன்படுத்தி முறைகேடுகள் மற்றும் தேவையற்ற தகவல்கள் பரிமாறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ட்விட்டர் எஸ்.எம்.எஸ் வசதியை நீக்கியது. தொடர்ந்து பயனர்கள் ட்விட்டர் கணக்கை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்கப்படும் கணக்குகள் எந்தவித பிரச்சனைகளும் இன்றி தொடர்ந்தது இயங்கும் இல்லையெனில் கணக்கு முடக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் எச்சரித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.