தேசிய அளவில் பள்ளிக்கல்வி செயல்திறன் குறியீடு – தமிழகம் ஏ++ மதிப்பீடு பெற்று சாதனை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 06, 2021

Comments:0

தேசிய அளவில் பள்ளிக்கல்வி செயல்திறன் குறியீடு – தமிழகம் ஏ++ மதிப்பீடு பெற்று சாதனை!!

நாடு முழுவதும் ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு மாநிலங்களை மதிப்பீடு செய்யும். இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மிக உயரிய மதிப்பீடான ஏ++ ஐ‌ பெற்றுள்ளன.

மிக உயரிய மதிப்பீடு:
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை 70 பிரிவுகளின் கீழ் அளவீடு செய்வதற்கு செயல்திறன் தரப்படுத்தல் குறியீட்டை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. 2019-20 ஆம் ஆண்டுக்கான செயல்திறன் தரப்படுத்தல் குறியீடுகளை வெளியிட மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அனுமதி அளித்துள்ளார். முதன்முதலாக 2019 ஆம் ஆண்டு, 2017-18 ஆம் ஆண்டுக்கான குறியீடு வெளியிடப்பட்டது. இந்த குறியீடு மூலமாக பல மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கல்வித்துறையில் முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ள ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்நிலையில் 2019-20ஆம் ஆண்டில் தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மிக உயரிய மதிப்பீடான ஏ++ ஐ‌ பெற்றுள்ளன.
ஆனால் கடந்த ஆண்டை கணக்கீடு செய்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தங்களது ஒட்டுமொத்த குறியீட்டு மதிப்பெண்ணில் கூடுதலாக 10%, அதாவது 100 அல்லது அதற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளன. குறியீடு மதிப்பெண் குறித்த விவரங்கள்:
அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள் மற்றும் பஞ்சாப் ஆகியவை அணுகுதல் என்ற பிரிவில் 10% (8 புள்ளிகள்) வளர்ச்சியைப் பெற்றுள்ளன. 13 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் என்ற பிரிவில் 10% (15 புள்ளிகள்) வளர்ச்சியை அடைந்துள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் ஒடிசா, 20% வளர்ச்சியைப் பெற்றுள்ளன.
அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் சம விகிதம் என்ற பிரிவில் 10%க்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளன. 19 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஆளுகை செயல்முறை என்ற பிரிவில் 10% வளர்ச்சியை (36 புள்ளிகள்) எட்டியுள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் குறைந்தபட்சம் 20 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews