SBI வங்கியில் ஜூலை 1 முதல் சேவை கட்டணம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 06, 2021

Comments:0

SBI வங்கியில் ஜூலை 1 முதல் சேவை கட்டணம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி ஜூலை 1 முதல் பல்வேறு சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது. SBI அறிவிப்பு:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ளது. இந்த வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஜூலை 1 முதல் வங்கியில் பணம் எடுப்பது, ஏடிஎம் பரிவர்த்தனை, செக் புக் போன்ற சேவைகளுக்கு கட்டணத்தை மாற்றி அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கட்டணம் அனைத்தும் அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மற்ற வங்கி ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு மூன்று தடவை பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். SBI ஏடிஎம்களில் பணம் எடுத்தால் பணம் வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் தற்போது வெளியிட்ட அறிவிப்பின் படி SBI ஏடிஎம்களில்ஒரு மாதத்தில் நான்கு முறை மட்டுமே பணம் இலவசமாக எடுக்க முடியும். அதற்கு மேல் எடுத்தால் பரிவர்த்தனை ஒன்றுக்கு 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.காசோலையை (செக் புக்) பொறுத்த வரையில் 10 லீஃப் வரை உள்ள செக் புக் பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை. அதற்கு மேல் 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதே போல 25 லீஃப் தாண்டினால் அதற்கு 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இவை அனைத்துடன் ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படும். ஆனால் மூத்த குடிமக்களுக்கு இந்த அறிவிப்பில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews