அரசு வழங்கியுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று மதுரை தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வழிமுறைகளை அரசு விரிவாக வெளியிட்டு உள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தான் கற்பித்தல் மற்றும் தேர்வுகளும் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான புகார்கள் எழுந்து வருகின்றது. இதனால் தமிழக அரசு ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. தனியார் பள்ளிகள் அரசின் நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரு பாட வேளையை 30 முதல் 45 நிமிடங்களாக நிர்ணயித்து உள்ளது. ஒரு ஆசிரியர் ஒரு நாளில் ஆறு வகுப்புகளும், வாரத்தில் 28 வகுப்புகளும் எடுக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும். ஒரு நாளில் 2 பாட வேளைகள் மட்டுமே ஒரு பாடத்திற்கு எடுக்க வேண்டும். குழந்தைகளை ஆன்லைன் வகுப்பிற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. ஆசிரியர்கள் செல்போனுக்கு முன்பக்கத்தில் இருந்து வகுப்புகளை எடுக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் அரசின் அறிவுறுத்தல் படி இன்று தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளது. மாணவர்கள் பள்ளி சீருடையுடன் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.