ட்விட்டர் வலைத்தளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை வைத்திருப்பவர்கள் தன்னை பின் தொடர்பவர்களிடம் இருந்து கட்டணம் பெறும் வகையில் புதிய அப்டேட் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ட்விட்டர்:
மக்கள் மத்தியில் முக்கிய சமூக வலைதள நிறுவனமாக திகழ்ந்து வரும் ட்விட்டர் கடந்த சில தினங்களாகவே பயனர்கள் அனைவரையும் வெகுவாக கவரும் வகையில் பல புதிய அப்டேட் குறித்த தகவலை வெளியிட்டு வருகிறது. அவை அனைத்தும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் சூப்பர் பாலோஸ் என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. அந்த வகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்களை வைத்திருக்கும் பயனர்கள் கூடுதல் ட்வீட், கூடுதல் உள்ளடக்கத்தை வழங்க தனது பலோவர்ஸ்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க உதவும். இந்த தளம் புதிய வருவாயை இயக்குவதை நோக்கமாக கொண்டிருப்பதால் ஆண்டு தொடக்கத்தில் ட்விட்டர் நிறுவனம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி சூப்பர் பாலோஸ் சேவைக்கு குறைந்தது 10 ஆயிரம் பின்தொடர்பவர்களை கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கடந்த 30 நாட்களில் சுமார் 25 ட்விட்களை செய்திருக்க வேண்டும் என்றும் அந்த பயனருக்கு குறைந்தது 18 வயதாகி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.