தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டிற்காக மாணவ, மாணவிகளுக்கு வழங்க பாடப்புத்தகங்கள் மாவட்ட முதன்மை அலுவலகங்களில் தயார் நிலையில் இருக்கின்றன என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
புத்தகங்கள் விநியோகம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கொரோனா அச்சம் காரணமாக தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவருக்கும் தற்போது மதிப்பெண்கள் வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதே போல் அடுத்த கல்வி ஆண்டு துவங்கியுள்ள நிலையில் பல தனியார் பள்ளிகளில் பாடங்கள் ஆன்லைன் வாயிலாக எடுக்கப்பட்டு வருகின்றது.
இப்படியிருக்க, நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாணவர்களுக்காக பாடப்புத்தங்கள் அச்சடிக்கப்பட்டதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் தற்போது புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது வகுப்பு வாரியாக பாடப்புத்தகங்கள் பிரித்து வைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல கொரோனா பரவலின் காரணமாக மாணவர்களுக்கு நேரில் சென்று பாடப்புத்தகங்களை வழங்கலாமா? அல்லது அவர்களை பள்ளிகளுக்கு அழைத்து நேரடியாக கொடுக்கலாமா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், தனியார் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.