பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கு விருப்பமுள்ள மாணவர்கள் இணையவழியில் ஜூலை 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
18,120 இடங்கள்
தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 51அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள்உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய (டிப்ளமோ) படிப்புகளுக்கு 18,120 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலையில் நடக்கவுள்ளது.
அதற்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முதலாம்ஆண்டு, நேரடி 2-ம் ஆண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் https://tngptc.in/ என்ற இணையதளம் வழியாக ஜூலை 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவினர் தவிர்த்து மற்றவர்கள் விண்ணப்பப் பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். இணையதள வசதி இல்லாதவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களின் பட்டியல் www.tngptc.com என்றஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 19 முதல் கலந்தாய்வு
விண்ணப்பிக்கும் வழிகாட்டுநெறிமுறைகள், உதவி மைய எண்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 19-ம் தேதி தொடங்கிநடக்கும் என்று தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் தெரிவித் துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.