மத்திய அரசின் ‘ஆர்யா’ வேளாண் தொழில் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளையோர் சுயதொழில் தொடங்கலாம்: பயிற்சியில் சேர ஜூலை 2-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 26, 2021

Comments:0

மத்திய அரசின் ‘ஆர்யா’ வேளாண் தொழில் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளையோர் சுயதொழில் தொடங்கலாம்: பயிற்சியில் சேர ஜூலை 2-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்

மத்திய அரசின் ‘ஆர்யா’ வேளாண் தொழில் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளையோர் சுயதொழில் தொடங்க பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில் பங்கேற்க வரும் ஜூலை 2-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக புதுச்சேரி குரும்பாப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாக்கிர் ஹுசைன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, 18 முதல் 35 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மகளிரை விவசாயத்தின் பால் ஈர்த்து தக்க வைக்கும் ஆர்யா (Attracting and Retaining Rural Youth Agriculture) என்ற திட்டத்தின் கீழ் திறன் வளர்க்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற் சிக்குப் பிறகு அதனைச் சார்ந்த சுய தொழில் தொடங்கவும் தேவையான உபகரணங்கள் மற்றும் உள்ளீட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தில் பயிற்சி பெறும் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் கிராமப்புற இளம் பெண்கள் தங்கள் பகுதியில் நிறுவனங்களை தொடங்கி மற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து, அவர்களை விவசாயத்தில் ஈர்த்து தக்க வைக்க வேண்டும். அந்த வகையில் இந்தாண்டு மண்புழு உரம் தயாரித்தல், நீரியல் முறையில் தீவனப்புல் வளர்ப்பு, முட்டை கோழி பொரிப்பகம் பராமரிப்பு, காளான் வளர்ப்பு (சிப்பிக்காளான் மற்றும் பால் காளான்), சிறுதானியங்கள் பதப்படுத்துதல், உயிரக காரணிகள் (ஒட்டுண்ணி கள்) வளர்ப்பு, சிறுதானியங்கள் பதப்படுத்துதல், குழிதட்டு நாற்றாங் கால் பராமரிப்பு, விவசாயத்தில் எரிசக்தி மற்றும் நீர் மேலாண்மை என்ற தலைப்புகளில் 25 நபர்கள் வீதம் பயற்சி அளிக்கப்பட உள்ளது.

விவசாயம் சார்ந்த மேற்கண்ட சுயதொழில்களுக்கான பயிற்சியில் கலந்து கொள்ள புதுச்சேரியை சார்ந்த ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் மகளிர் தங்களுடைய ஆதார் அட்டை நகலுடன் கீழ்காணும் சம்பந்தப்பட்ட வல்லுநர்களுடன் தொடர்பு கொண்டு வரும் ஜூலை 2-ம் தேதிக்குள் அலுவலக நேரம் மற்றும் நாட்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீரியல் முறையில் தீவனப்புல் வளர்ப்பு மற்றும் முட்டை கோழி பொரிப்பகம் பராமரிப்பு டாக்டர் சித்ரா திட்ட உதவியாளர் ( கால்நடை பிரிவு) -94890 52304, மண்புழு உரம் தயாரித்தல் அமலோர்பவநாதன் (பண்ணை மேலாளர்) -94890 52304, காளான் வளர்ப்பு மற்றும் சிறுதானியங்கள் பதப்படுத்துதல் பொம்மி துணை பயிற்றுநர் (மனையியல் பிரிவு) - 75982 52315.
உயிர்க் காரணிகள் (ஒட்டுண்ணிகள்) வளர்ப்பு விஜயகுமார், பூச்சியியல் (வல்லுநர்) 94425 25675, குழிதட்டு நாற்றங்கால் பராமரிப்பு-சந்திராதரன் துணைப் பயிற்றுநர் (தோட்டக்கலை) 94425 26998, விவசாயத்தில் எரிசக்தி மற்றும் நீர் மேலாண்மை பாஸ்கரன் திட்ட உதவியாளர் (வேளாண் பொறியியல் பிரிவு)-94890 52305 ஆகிய வல்லுநர்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 0413-2271292 , 2271352 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews