நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி போட்ட பின் இவர்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்குவதற்காக விவரங்கள் சேகரிக்கப்பட்டு மத்திய அரசின் 'கோ-வின் ஆப்பில் பதிவு செய்யப்படும். முதல் டோஸ் போட்டவர்களுக்கு 'சிங்கிள் புளூ டிக்' காட்டும். 2வது டோஸ் போட்ட வர்களுக்கு 14 நாட்களுக்கு பின் இந்த செயலில் 2 புளூ டிக்குடன் சான்றிதழ் வழங்கப்படும். தடுப்பு சான்றிதழ் வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்ட சில தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக மாறி உள்ளது. இதனால், இந்த சான்றிதழில் உள்ள விவரங்கள் அவரவர் தனி நபர் அடையாள அட்டையில் உள்ள விவரங்களும் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், பலருக்கு பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட் டவை தவறாக பதிவு செய்யப்பட்டு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தடுப்பூசி சான்றிதழில் பெயர், பிறந்த தேதி மற்றும் வருடம், பாலினத்தில் கவனக்குறைவாக பிழை ஏற்பட்டு இருந்தால், அதை சம்பந்தப்பட்ட நபர்களே 'கோ-வின்' ஆப்பில் சென்று திருத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.