அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்க வேண்டும் என்பதால், சில வகுப்புகளுக்கு மட்டும் மீண்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே தளர்வற்ற நிலையில் இருந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்களும் கடந்த இரண்டு நாட்களாக செயல்படத் தொடங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக பள்ளிகளில் உள்ள அனைத்து பணிகளை தொடரவும், பள்ளிகளை தயார் நிலையில் வைக்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆ சிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் 14ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு நடத்தப்படமாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது , உயர்கல்வி படிப்பதற்கான சான்றுகள் வழங்குவது தொடர்பான பணிகள் நடக்க இருப்பதால், மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாலும், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள், கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டியுள்ளது. மேலும், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியில் கற்றல் சார்ந்த நிகழ்வுகளை பார்வையிட வைக்க வேண்டியுள்ளது.
அதனால் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்( தொடக்கப்பள்ளிகள் முதல் மேனிலைப் பள்ளிகள் வரை) பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும். மேற்கண்டவர்கள் பணிக்கு வருவதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
Search This Blog
Thursday, June 10, 2021
Comments:0
Home
11th-12th
HeadMaster
STUDENTS
பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு செய்வது எப்படி? தலைமையாசிரியர்கள் 14-ம் தேதி பணிக்கு வர உத்தரவு!
பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு செய்வது எப்படி? தலைமையாசிரியர்கள் 14-ம் தேதி பணிக்கு வர உத்தரவு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.