மாமல்லபுரம் அரசு பள்ளி சிறுவன், பள்ளியை திறக்க கோரி, பள்ளி வாசல் முன் நின்று அடம் பிடித்தான்.
மாமல்லபுரத்தைச் சேர்ந்த தம்பதி மதியழகன் - லட்சுமி ஆகியோரின் இளையமகன் நிதின்ராஜ், 5. மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், முதல் வகுப்பில், கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டார்.
கொரோனா தொற்று பரவல் சூழலில், பள்ளிகள் ஓராண்டிற்கும் மேலாக திறக்கப்படவில்லை. இந்நிலையில், தன்னை பள்ளிக்கு அழைத்துச் செல்ல, பெற்றோரிடம் சில நாட்களாக வற்புறுத்தியுள்ளான்.
பள்ளி துவக்காதது குறித்து அவர்கள் கூறியும், சிறுவன் கேட்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பெற்றோரை எதிர்பார்க்காமல், சகோதரனின் சீருடையை அணிந்து, புத்தக பை சுமந்து, வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிக்கு புறப்பட்டான்.
பெற்றோர் தடுத்தும் அடம்பிடித்து, விறுவிறுவென நடந்து பள்ளிக்கு சென்றான்.
பள்ளி நுழைவாயிலில் நின்று, பள்ளியை திறக்குமாறு, அழுகையுடன் கதவை தட்டினான்.
அவ்வழியே சென்றோர், சிறுவன் ஆர்வம் கண்டு வியந்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.