Breaking

Wednesday, June 09, 2021

5 சவரன் வரை நகைக் கடன் தள்ளுபடி குறித்து விரைவில் அரசாணை

5 சவரன் வரை நகைக் கடன் தள்ளுபடி குறித்து விரைவில் அரசாணை - அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்வது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்குப் பயிர்க்கடன், இடுபொருட்கள் வழங்கல் குறித்த ஆய்வுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியசாமி, அதிமுக ஆட்சி காலத்தில் பயிர் கடன் தள்ளுபடியில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்தும் விசாரிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog