கல்லூரிகளுக்கே நுழைவு தேர்வு நடத்த கூடாது என கூறும் திமுக, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்த ஆணையிடுவது ஏன்..? ராமதாஸ்
தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்த கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் சேர, அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு தேர்வு நடத்தி, அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கல்லூரிகளுக்கே நுழைவு தேர்வு நடத்த கூடாது என கூறும் திமுக அரசு, 11-ஆம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த ஆணையிடுவது எந்த வகையில் நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ள அவர், கடந்த ஆண்டை போல மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.