உயர்கல்வி பயில்வதற்கான மாணவியர் சேர்க்கையில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம், 2019 - 20ம் ஆண்டு உயர்கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பான
ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2019 - 20ம் கல்வி ஆண்டில், தேசிய அளவிலான கல்வி மையங்களில், உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை 24.7 சதவீதம் என்ற அளவிற்கு குறைவாக உள்ளது.
இது, நிகர் நிலை பல்கலையில் 33.4 சதவீதம்; தனியார் பல்கலையில் 34.7 சதவீதம்; அரசு பல்கலையில் 61.2 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை, உயர்கல்வி மாணவ - மாணவியர் சேர்க்கையில், உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மாணவியர் சேர்க்கையில் மட்டும் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், மாணவ - மாணவியர் ஒட்டுமொத்த சேர்க்கையில் மஹாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது. தேசிய அளவில், செயல்முறை சாரா கல்வியுடன் ஒப்பிடும்போது, தொழிற்கல்வியில் மாணவியரின் சேர்க்கையும் குறைந்து உள்ளது. எம்.பில்., முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்பு தவிர அனைத்து நிலைகளிலும், மாணவர்களின் பங்கு அதிகமாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.