பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - 2021 -21 ஆம் கல்வி ஆண்டு - மேல்நிலை பொதுத் தேர்வு நடத்துதல் சார்ந்து - கருத்து கேட்டறிந்து தொகுப்பறிக்கை அனுப்பிட தெரிவித்தல் - சார்பு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 02, 2021

Comments:0

பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - 2021 -21 ஆம் கல்வி ஆண்டு - மேல்நிலை பொதுத் தேர்வு நடத்துதல் சார்ந்து - கருத்து கேட்டறிந்து தொகுப்பறிக்கை அனுப்பிட தெரிவித்தல் - சார்பு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 2021 -21 ஆம் கல்வி ஆண்டு - மேல்நிலை பொதுத் தேர்வு நடத்துதல் சார்ந்து - கருத்து கேட்டறிந்து தொகுப்பறிக்கை அனுப்பிட தெரிவித்தல் - சார்பு.
பார்வை
பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் 34462/பிடி1/இ1/2020 நாள். 02.06.2021.
ந.க. எண்.
2021 -21 ஆம் கல்வி ஆண்டு மேல்நிலை பொதுத் தேர்வு கருத்து அறிதல் தொடர்பான பார்வையிற்காணும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் மீது அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் உடனடி கவனம் கொண்டு வரப்படுகிறது.
அச்செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டவாறு, மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை (மத்திய அரசு பாடதிட்ட பள்ளிகள் நீங்கலாக) மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து, அவர்களது பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர்கள் கருத்துக்களை கேட்டறிந்து 03.06.2021 அன்று தொகுத்திட தக்க வகையில் மாவட்டக் கல்வி அலுவலக அளவில் ஒரு குழுவினை தயார் நிலையில் வைத்து இருக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / ஆதி திராவிட நல / உதவி பெறும் / சுயநிதி / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கருத்துக்களை கேட்டறிந்து இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 03.06.2021 அன்று மாலை 2.00 மணிக்குள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்திடவும், மேற்படி கருத்துக்களின் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட வேண்டும் அல்லது நடத்திட வேண்டாம் என்பதற்கான சுருக்கமான காரணங்களுடன் கூடிய ஒரு பக்க அறிக்கை ஒன்றையும் மாவட்டக் கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திடவும் தெரிவிக்கப்படுகிறார்கள்.
கல்வி மாவட்ட அளவில் பெறப்பட்ட கருத்துக்களை தொகுத்து தொகுப்புறிக்கையினை 03.06.2021 அன்றே மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதுடன் தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு பக்க அறிக்கைகளை பிரதி எடுத்து தொகுத்து தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - படிவம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews