தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் விருப்ப தேர்வு முடிவுக்கு பின் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்து பல்கலை மானிய குழு விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் கணக்கீட்டு முறையையும் தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த மதிப்பெண்கள் போதாது என்றும் கருதும் மாணவர்களுக்கு விருப்ப தேர்வு நடத்தப்படும் என்றும் அந்த மதிப்பெண் இறுதியானது என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்தேர்வு ரத்து எனும் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் மனுவில் தெரிவித்ததாவது, தமிழகத்தில் கொரோனா அச்சம் முடிவுக்கு வந்த பின் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பின் பொதுத்தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் இதனை தான் நன்றாக படிக்கும் மாணவர்கள் விரும்புவார்கள் என்றும் தெரிவித்தார். ஆனால் இதனை விசாரித்த நீதிபதி பள்ளிக் கல்வித்துறை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தது,
இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்த விவகாரத்தில் மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை குறித்தும் அதை ஏற்க மறுக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளதை சுட்டி காட்டிய மனுதாரர், ஜூலை 1ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார். ஆகையால் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பின் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையை தொடங்க பல்கலை மானிய குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினர். இதையடுத்து இது குறித்து விளக்கமளிக்க பல்கலை மானிய குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைத்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.