Breaking

Tuesday, June 29, 2021

தமிழக தனியார் பள்ளிகளில் கட்டண பாக்கியை செலுத்த வற்புறுத்தல் – அரசு பதிலளிக்க உத்தரவு!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் தனியார் பள்ளிகள் அனைத்தும் பெற்றோர்களிடம் 100% கட்டணம் செலுத்த வற்புறுத்த கூடாது என்றும் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றால் கடந்த ஆண்டு கட்டண பாக்கியை செலுத்த தனியார் பள்ளிகள் அறிவுறுத்தி வருவதாக குற்றம் எழுந்துள்ளது. தற்போது இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து மனுவில் தெரிவித்ததாவது, ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் கலந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு கல்வியில் இடையூறு ஏற்பட கூடாது என்று தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது இதனை தனியார் பள்ளிகள் மீறுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்கான உபகரணங்கள் மற்றும் இணைய வசதியை நிவாரணமாக அரசு வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து தமிழக அரசு அடுத்த வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog