தமிழகத்தில் உள்ள அரசு நகராட்சி, மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான விவரங்களை மே மாதம் 10 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசு சார்பில் செயல்படும், அரசு நகராட்சி, மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 05.05.2021 நிலவரப்படி காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான விவரங்களை பூர்த்தி செய்து, கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பி அதனை மே 10 ஆம் தேதிக்கு அனுப்ப வேண்டும்.
அவ்வாறு அனுப்பும் போது முதன்மை கல்வி அலுவலரின் கையப்பமிட்டு அனுப்பி வைக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்களை அனுப்பும் போது 01.08.2019 பணியாளர் நிர்யணத்தின் படி ஆசிரியரின்றி உபரி என கண்டறிந்து இயக்குனரின் பொது தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை காலி பணியிடங்களாக அறிவிக்க கூடாது.
மேலும் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் விவரங்களையும் காலிப்பணியிடங்களாக கருதக் கூடாது என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு அனுப்பப்பட்ட காலிப்பணியிட விவரங்களை நாளது தேதியில் அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத் தகுந்த காலிப்பணியிடம் தானா என்பதை உறுதி செய்த பின்னரே உரிய படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Search This Blog
Thursday, May 06, 2021
Comments:0
தமிழக அரசு பள்ளி காலிப்பணியிடங்கள் – பள்ளிக்கல்விதுறை உத்தரவு!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.