இந்தியாவில் பெருகி வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுத்தேர்வு, நுழைவுத்தேர்வுகள் போன்ற பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் முதுநிலை ஆயுஷ் படிப்புக்கான நுழைவுத்தேர்வும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நுழைவு தேர்வு ஒத்திவைப்பு
நாடு முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன் படி, மருத்துவ மாணவர்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு, JEE நுழைவுத்தேர்வு போன்றவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுநிலை ஆயுஷ் படிப்பு நுழைவுத்தேர்வும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று (மே 5) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய முதுநிலை படிப்புக்காக மாணவர்களுக்கு ஆயுஷ் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி 2021-2022 கல்வியாண்டிற்கான முதுநிலை ஆயுஷ் நுழைவுத்தேர்வு ஜூன் மாதம் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தாக்கம் எதிரொலியாக ஆயுஷ் நுழைவுத் தேர்வு 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இதற்கான மாற்று தேதிகள் மற்றும் இணையதள விண்ணப்பப்பதிவு தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களை அறிந்துகொள்ள மாணவர்கள் www.nta.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் அல்லது 011-40759000 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்தி மேலும் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.