தமிழகத்தில் தொலைதுார கல்விக்கு ஆன்லைனில் தேர்வு – இயக்குனர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 07, 2021

Comments:0

தமிழகத்தில் தொலைதுார கல்விக்கு ஆன்லைனில் தேர்வு – இயக்குனர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா காரணமாக தொலைதூர மைய மாணவர்களுக்கு மற்ற மாணவர்களை போல ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடைபெறும் என பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் தேர்வுகள்: தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக திறக்கப்படவில்லை. அதன் பின்னர் மாநில அரசின் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் திறந்து 2 மாதங்களில் பல மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதனால் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைதூர மையம் மூலமாக படிக்கும் மாணவர்களுக்கு எவ்வாறு வகுப்புகள் நடத்தப்படும் என்பது கேள்வி குறியானது. இந்நிலையில் தற்போது கோவை பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர மைய இயக்குனர் வெளியிட அறிவிப்பின் படி, தொலைதூர படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களுக்கு மற்ற மாணவர்களை போல ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் நடைபெறும். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பின்னர், இவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews