பெங்களூரு: துவக்க நிலை குழந்தைகள், ஓராண்டாக பள்ளிக்கு செல்லாமல், ஆசிரியர்களின் நேரடி கவனிப்பு இல்லாமல், வாசித்தல் மற்றும் எழுதும் திறன்களை மறந்துவருகின்றனர்.
கொரோனா பரவல் துவங்கியது முதல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வீட்டிலிருக்கும் மாணவர், மாணவியருடன் ஆன்லைனில் பேசுவதும்; கற்பித்தல் செயல்பாடுகளை நடத்துவதும் என ஆசிரியர்கள் உள்ளனர்.உயர்நிலை மற்றும், பி.யு.சி., மாணவர்கள் இடையிடையே பள்ளி சென்றனர்.
இந்த வாய்ப்புகளும் துவக்க நிலை குழந்தைகளுக்கு, கிடைக்கவில்லை. இந்நிலையில், அவர்களின் கல்வி நிலை குறித்து, பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
கடந்தாண்டு, முதலாம் கல்வியாண்டில் அடியெடுத்து வைத்த குழந்தைகள், பள்ளி செல்வதையே மறந்து விட்டனர். அடிப்படை கல்வியை கற்பித்தல், ஆசிரியர்களுக்கு சவாலான ஒன்று. எழுத்துகளை உச்சரிக்கவும், தடையின்றி எழுதுவதற்கு பழக்கி, அடுத்த வகுப்புகளில் தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கு ஆயத்தப்படுத்திய ஆசிரியர்களின் பணிகள், பல குழந்தைகளிடம் வீணாகியுள்ளது.
வாசித்தல், எழுதும் திறன்களை துவக்க நிலை மாணவர்கள் மறந்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் பள்ளிக்கு செல்வது பாதுகாப்பில்லை என்றாலும், மாணவர்களின் கற்றல் நிலை மோசமடைந்து வருகிறது.மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என பெற்றோர், யோசனையில் ஆழ்ந்துள்ளனர்.
பெற்றோர் கூறுகையில், &'ஆன்லைனில் ஆசிரியர்கள் வருவதற்கு, குழந்தைகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. விளையாட்டாக எடுத்து கொள்கின்றனர். வகுப்புகளுக்கு செல்ல வேண்டியதில்லை என்பதால், புத்தகங்களை தொடுவதே இல்லை. பெற்றோரின் அச்சுறுத்தலுக்கும் செவிசாய்ப்பதில்லை,&' என்றனர்.
கல்வியாளர் ஒருவர் கூறுகையில்,&'ஓராண்டு இடைவெளி ஏற்பட்டுள்ளதால், இந்த சிக்கல்கள் குழந்தைகளிடம் இருக்கத்தான் செய்யும். பெற்றோர், இதை கவனித்து, பள்ளி விடுமுறை என்றாலும், நாள்தோறும் எழுத்து மற்றும் வாசித்தல் பயிற்சி அளிக்க வேண்டும்.பள்ளி திறந்த பின், &'பிரிட்ஜ் கோர்ஸ்&' முறையில், முந்தைய வகுப்பு பாடங்களை திரும்ப படித்து, மாணவர்களை தயார்படுத்த, கல்வித்துறையும் திட்டமிட வேண்டும்&' என்றார்.
Search This Blog
Friday, May 07, 2021
Comments:0
படிக்க மனம் வரவில்லையே... பாடங்களை மறக்கும் குழந்தைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.