ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கர்நாடகா மில்லாத் கூட்டுறவு வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
வங்கி கட்டுப்பாடுகள்
வங்கித் துறையில் நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் வங்கி சீரமைப்புத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் நலிந்து வரும் வங்கிகளை மேம்படுத்தவும், அந்த வங்கிகள் தொடர்ந்து செயல்படவும் தேவையான உதவிகளை வழங்குகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மில்லாத் கூட்டுறவு வங்கி கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சினையை சந்தித்து வந்தது. அதன் காரணமாக இந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் படி இந்த வங்கியின் வாடிக்கையாளருக்கு அல்லது ஏதாவதொரு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதற்கோ அல்லது கொடுத்த கடனை ரத்து செய்வதற்கோ ரிசர்வ் வங்கியின் அனுமதி கட்டாயம். அதேபோல, அந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் தற்போது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன் படி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையில் மில்லாத் கூட்டுறவு வங்கி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும். முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் இந்த வங்கியின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பிறகு 2021 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ஒருவரும் அவர்களது சேமிப்பு கணக்கில் இருந்து 1000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என்பது இந்த கட்டுப்பாடுகளில் ஒன்றாகும். இந்த கட்டுப்பாடுகளால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.