தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் கரோனா பாதுகாப்பு மையம் ஆகிய இடங்களில் அமைச் சர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: கரோனா காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை மிகவும் வருந்தத்தக்க ஒன்றுதான். இவர்களில் பலரும் தங்களின் சிரமங்கள் குறித்து செல்லிடப்பேசியிலும், மின்னஞ்சலிலும் என்னிடம் தெரிவித்துள் ளனர். இவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க விரைவில் முதல்வருடன் கலந்தா லோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல்,முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக் கவும் ஏற்பாடு செய்யப்படும். கரோனா தொற்று பாதித்து மருத்துவமனை யில் இறக்காமல் வீட்டிலோ அல்லது வரும் வழியிலோ பெற்றோர் இறந்தா லும், அந்தக் குழந்தைகளுக்கும் உரிய நிவாரணத் தொகைகிடைக்க வழிவகை செய்ய முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். நீட் தேர்வு குறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்ப டும். மேலும், பிளஸ் 2 தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு பள் ளிகள் திறக்கப்பட்டு, குறைந்தபட்சம் ஓரிரு மாதங்களுக்கு பிறகே தேர்வு நடத் தப்படும் என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.