கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி குழந்தை திருமணம்: தமிழக அரசு எச்சரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 31, 2021

Comments:0

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி குழந்தை திருமணம்: தமிழக அரசு எச்சரிக்கை!

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி குழந்தை திருமணம்: தமிழக அரசு எச்சரிக்கை.
பத்திரிக்கை செய்தி
கோவிட் 19 இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக, குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி.பி. கீதாஜீவன் அவர்களின் தலைமையில் அனைத்து மாவட்ட சமூக நல அலுவலர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சைல்டு லைன் 1098 அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (31.05.2021) காலை 11.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இவ்வாலோசனைக் கூட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், அது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், குழந்தை திருமணம் தடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றுடன் இணைந்து சமூக பாதுகாப்புத் துறையும் சமூகநலத் துறையும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள் மற்றும் இத்தகைய குழந்தை திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எச்சரிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் என சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் அரசு முதன்மைச் செயலர் திரு. ஷம்பு கல்லோலிகர், இ.ஆ.ப., சமூகநல ஆணையர் திரு. த. ஆபிரகாம்,இ.ஆ.பபு சமூகப் பாதுகாப்புத் துறை ஆணையர் திரு.வே. லால்வேனா,இ.ஆ.படி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் திருமதி. கவிதா ராமு,இ.ஆ.ப., மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews