கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மத்திய பிரதேச பள்ளிக் கல்வித்துறை 10 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளை ரத்து செய்து, 12 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளை அடுத்த உத்தரவு வரும் வரை ஒத்திவைத்துள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு: நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச பள்ளிக் கல்வித்துறை 10 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளை ரத்து செய்துள்ளதுடன், மாநிலத்தின் COVID-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, 12 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளை அடுத்த உத்தரவு வரை ஒத்திவைத்துள்ளது. 12 ஆம் வகுப்பை பொறுத்தவரை, கொரோனா பரவல் குறையும் போது புதிய தேதிகள் அறிவிக்கப்படும், மேலும் மாணவர்களுக்கு குறைந்தது 20 நாட்களுக்கு முன்பே தகவல் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு, முன் வாரியம், தேர்வுகள், அலகு சோதனைகள் மற்றும் உள் மதிப்பீடுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். ஏற்கனவே CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், 12ம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இது தொடர்பாக அரசு எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. தமிழகத்திலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.