கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை - அரசாணை வெளியீடு - அரசாணை (நிலை) எண்:231 நாள்: 07.05.2021 - தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் - ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கோவிட்-19 தொற்று சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்க ஆணை வெளியிடப்படுகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 10, 2021

Comments:0

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை - அரசாணை வெளியீடு - அரசாணை (நிலை) எண்:231 நாள்: 07.05.2021 - தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் - ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கோவிட்-19 தொற்று சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்க ஆணை வெளியிடப்படுகிறது

தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் - ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கோவிட்-19 தொற்று சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்க ஆணை வெளியிடப்படுகிறது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்(அஉதிI-1) துறை
அரசாணை (நிலை) எண்:231 நாள்: 07.05.2021
திருவள்ளுவர் ஆண்டு: 2052 பிலவ, சித்திரை - 24
படிக்கப்பட்டவை:
1. அரசாணை (நிலை) எண்.240, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதிI-1) துறை, நாள்.05.06.2020.
2. அரசாணை (நிலை) எண்.290, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதி-1) துறை, நாள்.03.08.2020.
3. அரசாணை ( நிலை) எண்.433, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதிI-1) துறை, நாள்.28.10.2020.
4. அரசாணை (நிலை) எண்.578, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதிI-1) துறை, நாள்.29.12.2020.

மேலும் படிக்கப்பட்டது:
5. திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், கடித எண்.1887/தசுதி/காப்பீடு 1/2020, நாள்.05.05.2021 ஆணை:
தமிழக அரசு அனைத்து மக்களின் நலனை *மேம்படுத்தும் நோக்குடன், ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக இலவச மருத்துவச் சேவைகளை செயல்படுத்தி வருகிறது.
2. உலக சுகாதார அமைப்பு, தற்போதுள்ள கோவிட் தொற்று பாதிப்பினை உலகளாவிய பொது சுகாதார பேரிடராகவும், இது கட்டுப்படுத்தக் கூடிய நிகழ்வாகவும் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், தமிழக அரசு பொது சுகாதார சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் இந்த கோவிட்-19 தொற்று பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்குடன் பெருவாரியாக பரவும் தொற்றுச் சட்டம்-1897-ன்படி வழிகாட்டு வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் படியும், கோவிட்-19 தொற்று முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு வழிகாட்டு முறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
3. தமிழகத்தில் தற்பொழுது கோவிட்-19 தொற்றுப் பரவல் தன்மையின் நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த தொற்றுப் பரவலை தடுக்கும் நோக்குடன் தமிழகத்தில் உள்ள, கோவிட்-19 தொற்று சிகிச்சை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மூலமாக தேவைக்கேற்ப கூடுதல் தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கிட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளின் நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தும் நோக்குடன் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (ஒழுங்குப்படுத்துதல்) சட்டம் 1997 (Tamilnadu Clinical Establishment (Regulations) Act) இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 4. மேலே ஐந்தில் படிக்கப்பட்ட கடிதத்தில், அனைத்து சம்பந்தப்பட்ட பங்கேற்பாளர்களையும் கலந்தாலோசித்து, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் அவர்கள் அனைத்து கோவிட்-19 தொற்று சிகிச்சைகளை ஏழை எளியோருக்கு ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கிட கருத்துருவினை அரசுக்கு சமர்ப்பித்துள்ளார்.
5.மேற்காணும் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு பரிசீலினை செய்து கீழ்க்கண்டவாறு ஆணை வெளியிடுகிறது:
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கோவிட்-19 தொற்று சிகிச்சைகளுக்கான செலவினங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு தொகை மீள வழங்கப்படும்.
II. கோவிட்-19 தொற்று சிகிச்சைக்காக செலவான தொகையினில் மொத்த செலவினம், காப்பீட்டுத் தொகையை விட அதிகமாக காப்பீட்டு நிறுவனத்தால் செலவிடப்பட்டால், ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செலவிடப்பட்ட உரிமைக் கோரல் (Internal Claim) விகிதம் 95 விழுக்காட்டிற்கு மேல் வரும்போது கூடுதல் தொகையினை, காப்பீட்டு நிறுவனத்திற்கு மீள வழங்கிட தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 6. இந்த அரசாணை நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அலுவலக எண். 1458/FS/P/2021, நாள்: 07.05.2021-ன் இசைவுடன் வெளியிடப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
பெறுநர்
திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், சென்னை-6.
குழும இயக்குநர், தேசிய நலக் குழுமம், சென்னை-6.
ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு முதன்மைச் செயலாளர்.
இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம், சென்னை-6. மருத்துவக் கல்வி இயக்குநர், சென்னை - 10.
இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, சென்னை-6. மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம், சென்னை-8.
ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை-3. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews