Breaking

Saturday, May 29, 2021

பாலியல் புகார் - மேலும் ஒரு பள்ளிக்கு நோட்டீஸ் - சென்னை மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலரின் செயல்முறைகள் - நாள்: 29.05.2021

பாலியல் புகார் - மேலும் ஒரு பள்ளிக்கு நோட்டீஸ்.
செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்.
பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள ஆசிரியர் மீதான நடவடிக்கை தொடர்பான விளக்கத்தை இன்றே சமர்ப்பிக்க CEO ஆணை.
பார்வையில் காணும் 29.05.2021 நாளிட்ட பத்திரிக்கை செய்தியில் செனாய் நகர். புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் மீது அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளியின் தாளாளர்/முதல்வர் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் ஆஜராக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் பெயர் மற்றும் அன்னார் மீது பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை விவரம் மற்றும் அவ்வாசிரியர் மீது இதற்கு முன்பு மாணவிகளிடமிருந்து புகார் ஏதும் பெறப்பட்டு பள்ளி நிர்வாகத்தால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற விவரத்தினை இச்செயல்முறை கிடைக்கப்பெற்ற அன்றே இவ்வலுவலகம் சமர்பித்திட பள்ளியின் தாளாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog