தமிழகத்தில் கொரோனா சிகிச்சை மையங்கள் கண்காணிப்பு – சிறப்பு அதிகாரி நியமனம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 28, 2021

Comments:0

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை மையங்கள் கண்காணிப்பு – சிறப்பு அதிகாரி நியமனம்!

தமிழகத்தில் உள்ள கொரோனா மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா மையங்கள்: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் நோய் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டி பதிவு செய்யப்படுகிறது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவை கொரோனா மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. கொரோனா நோயாளிகளுக்காக தமிழகத்தில் நேற்று முதல் 12,000 படுக்கைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள், முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை குறித்து கண்காணிக்க சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகள், கொரோனா மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா மையங்களில் சரியான சிகிச்சை அளிக்கப்படுகிறதா, கட்டணம் வசூலிப்பு விவரங்கள் குறித்து அவர் கண்காணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள், சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் குறித்து விசாரிக்கவும் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்காமல் செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா மையங்கள் மீண்டுமாக இயங்க அனுமதிக்கப்படுமா என்றும் அவர் கருத்து தெரிவிப்பார் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews