தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு மே 1 முதல் விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 29, 2021

Comments:0

தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு மே 1 முதல் விடுமுறை

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மே 1ம் தேதி முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை. பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டுதலை, ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்தே செய்யலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்புகள் நடக்க பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக மார்ச் 23ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதே நேரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு செய்முறை தேர்வுகள் முடிந்துள்ளன. மே 5ம் தேதி தொடங்க இருந்த பிளஸ் 2 தேர்வு கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் வர வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை. [Press Release No : 235 ] From Health and Family Welfare Department - On procurement of COVID-19 vaccines through TNMSC - PDF
இருந்தாலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு வரும் வரை அவர்களை தேர்வுக்காக தயார் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர மற்ற வகுப்பு மாணவர்கள் படிப்பில் இடைவெளி இல்லாமல் படிப்பதை உறுதி செய்ய இணைப்பு கல்வி உபகரணங்கள் (Bridge course material) மற்றும் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டு, அது தொடர்பான நிகழ்ச்சிகள் கல்வித் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மே 1ம் தேதி முதல் பள்ளிக்கு வர தேவையில்லை. ஆனாலும், பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டுதல்களை தங்கள் வீட்டில் இருந்தே தொடர்ந்து செய்ய வேண்டும்.மற்ற வகுப்பு மாணவர்களுக்கான பிரிட்ஜ் கோர்ஸ், பயிற்சி புத்தகங்கள் தொடர்பான பணிகளையும் தங்கள் வீட்டில் இருந்தே செய்ய வேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – தலைமை செயலர் வெளியீடு!!
இதற்காக பெற்றோரிடம் இருந்து மாணவர்களுக்கான செல்போன் எண்கள், வாட்ஸ்அப் மற்றும் பிற டிஜிட்டல் வழிகள், மாற்று வழிகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். இந்த செல்போன் வாட்ஸ்அப் உள்ளிட்ட வழிகளின் மூலம் மாணவர்கள் அனுப்பி வைக்கும் விடைத்தாள்களை ஆசிரியர்கள் சரிபார்த்து தேவையான வழிகாட்டுதல்களை வழங்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர அடுத்த கல்வி ஆண்டுக்காக பள்ளிகளை தயார் செய்யவும், அதற்கான ஆயத்த பணிகளை செய்யவும், மாணவர்களின் மேற்கண்ட பயிற்சிகளை ஆய்வு செய்து அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கும் வகையில் மே மாதம் கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிகளுக்கு வர வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews