Breaking

Wednesday, April 28, 2021

ஜேஇஇ (JEE) நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு? கொரோனா தொற்று எதிரொலி!!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஜூலை மாதம் 3 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த JEE நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
JEE தேர்வு: பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் JEE நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான JEE நுழைவுத்தேர்வு ஜூலை மாதம் 3ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக IIT-JEE நுழைவுத்தேர்வுகளை மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாக கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் நடத்தப்பட வேண்டிய பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது JEE நுழைவுத்தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து காரக்பூர் ஐஐடியை சேர்ந்த 3 பேர் கொண்ட குழு கடந்த செவ்வாய் கிழமை ஆலோசனை மேற்கொண்டது. அதன்படி JEE மெயின்ஸ் மற்றும் அட்வான்ஸ் தேர்வுக்கு இடையில் குறிப்பிட்ட அளவு கால அவகாசம் இருக்க வேண்டும் என்பதால் ஜூலை 3 ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் மாற்றி வைக்கப்படும் என JEE தேர்வுக்குழுவின் சேர்மன் டெபாஷிஷ் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். JEE தேர்வுகள் ஒத்திவைப்பது குறித்த இந்த தகவலை jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளமும் உறுதி செய்துள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட வேண்டிய JEE Main தேர்வுகள் கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் ஒத்தி வைக்கப்பட்ட JEE Main தேர்வுகளை நடத்த முடியாத சூழல் தற்போது காணப்படுகிறது. நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 3 லட்சம் வரை கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்படுவதால் JEE நுழைவுத்தேர்வுகளை மீண்டுமாக ஒத்தி வைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக ஐஐடியில் படிப்பதற்கு மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வுகளை நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால் பொதுத்தேர்வுகள், CBSE மற்றும் CISCE தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் நுழைவுத்தேர்வுகளை நடத்த வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog