தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உயர்கல்வி தகுதி அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஊக்க ஊதியம் வழங்குவதை ரத்து செய்து கடந்தாண்டு மார்ச் 10ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு, அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 15ம் தேதி தமிழக அரசு மீண்டும் அரசாணை வெளியிட்டது. அதில் கடந்தாண்டு மார்ச் 10க்கு முன்னர் உயர்கல்வி படித்தவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம் என்று உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக பொதுப்பணித்துறையில் உயர்கல்வி படித்த 152 பேருக்கு அட்வான்ஸ் ஊதிய உயர்வு வழங்க பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழக பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு பிஇ சிவில் இன்ஜினியரிங், இளநிலை உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் கல்வித் தகுதியாக உள்ளது. அதன்படி பிஇ முடித்து பணியில் சேர்ந்தவர்கள் பணியில் இருந்து கொண்டே முதுகலை, முனைவர் படிக்கின்றனர். அவ்வாறு படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி தகுதியின் அடிப்படையில் அட்வான்ஸ் ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் 10ம் ேததிக்கு முன்னர் முதுகலை (எம்இ) மற்றும் பிஎச்டி படித்த பொதுப்பணித்துறையியல் 152 பொறியாளர்களுக்கு அட்வான்ஸ் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது’ என்றார்..
Search This Blog
Monday, April 12, 2021
Comments:0
Home
EDUCATION
PROMOTION
SALARY/INCREMENT
TAMILNADU
உயர்கல்வி தகுதியின் அடிப்படையில் ஊக்க ஊதிய உயர்வு - தமிழக அரசு உத்தரவு
உயர்கல்வி தகுதியின் அடிப்படையில் ஊக்க ஊதிய உயர்வு - தமிழக அரசு உத்தரவு
Tags
# EDUCATION
# PROMOTION
# SALARY/INCREMENT
# TAMILNADU
TAMILNADU
Labels:
EDUCATION,
PROMOTION,
SALARY/INCREMENT,
TAMILNADU
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.