Breaking

Wednesday, April 14, 2021

பள்ளிகளில் கொரோனா கண்காணிக்க சிறப்பு குழ

பள்ளிகளில் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க, சிறப்பு குழு மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ளது.
B.Ed பட்ட சான்றிதழ் வினியோகம் துவக்கம்
கொரோனா ஊரடங்கிலும், பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடர்கின்றன. இதற்காக, அரசு தரப்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.பெரும்பாலான மாவட்டங்களில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு நோய்த்தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளை மறுநாள் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு துவங்க உள்ளதால் பள்ளிகளில் தடுப்பு பணிகள் முறையாக கையாளப்படுவதை உறுதிசெய்ய, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது. RTE மாணவர்கள் சேர்க்கை எப்போது?
இதில், தமிழ்நாடு பாடநுால் கழக நிர்வாக இயக்குனர் ஜெயந்தி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ், ஒருங்கிணைந்த பள்ளி இயக்குனர் லதா மற்றும் கூடுதல் இயக்குனர் அமிர்தஜோதி ஆகியோர் தலைமையில், இணை இயக்குனர்கள் அடங்கிய குழு நியமிக்கப் பட்டுஉள்ளது.இந்த குழுவினர், பள்ளி வாரியாக களஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயார் செய்ய உள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog