வரும் மே, ஜூன் மாதங்களில் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ இலவச ரேஷன்: மத்திய அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 24, 2021

Comments:0

வரும் மே, ஜூன் மாதங்களில் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ இலவச ரேஷன்: மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா 2வது அலையால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு வரும் மே, ஜூன் மாதங்களில் 5 கிலோ இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வீரியத்துடன் தாக்கி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மேலும், முழு நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு ஆகியவற்றையும் அமல்படுத்தி இருக்கின்றன. இதனால், ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடுமையாக துயரப்பட்டு வருகின்றனர்.
ஆன்லைனில் தட்டச்சு பயிற்சி: அரசு உத்தரவு கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. இதேபோல், கொரோனா 2வது அலையால் மக்கள் பாதித்து இருப்பதால், இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
CEO உட்பட 301 பேருக்கு கொரோனா
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ உணவு பொருள் இலவசமாக வழங்கப்படும். வரும் மே, ஜூன் மாதங்களில் இந்த இலவச உணவு தானியங்களை மக்கள் பெற்றுக் கொள்ளலாம்,’ என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசுக்கு ரூ.26 ஆயிரம் கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews