தேசிய கல்விக்கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அனைத்து மொழி பேசும் மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் மாநில மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டது. இதில், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு உள்ள நிலையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் மாநில மொழிபெயர்ப்புகளை மத்திய அரசு இன்று வெளியிட்டிருக்கும் நிலையில், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் புதிய தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட்டிப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு இடம்பெறவில்லை.
இந்தியாவில் நடைமுறையில் இருந்த 1986-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட 34 ஆண்டுகள் பழைமையான தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. அதன் மூலம் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களும், கல்வியாளா்களும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். பல மாநிலங்கள், இந்த புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய குழுக்களை அமைத்துள்ளன.
இந்த நிலையில், புதிய தேசியக் கொள்கை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து மத்திய அரசு பதிவேற்றம் செய்துள்ளது. ஆனால், புதிய தேசியக் கொள்கை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Saturday, April 24, 2021
Comments:0
தேசிய கல்விக்கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.