படிக்கலாம் வாங்க! சாதிக்கலாம் வாங்க! - அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கிராமப்புற பள்ளி மாணவர்களின் கல்வித் தேடலுக்கான வாய்ப்பை வழங்குகிறது அகரம் பவுண்டேஷன் "விதைத்திட்டம்" 2021 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 13, 2021

Comments:0

படிக்கலாம் வாங்க! சாதிக்கலாம் வாங்க! - அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கிராமப்புற பள்ளி மாணவர்களின் கல்வித் தேடலுக்கான வாய்ப்பை வழங்குகிறது அகரம் பவுண்டேஷன் "விதைத்திட்டம்" 2021 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

மதிப்பிற்குரிய உறுதுணையாளர்களுக்கு
அகரம் அறக்கட்டளையின் வணக்கங்கள்
விதை 2021 ஆம் ஆண்டிற்கான மாணவர் தேர்வு மார்ச் 2021 ஆம் மாதத்திலேயே தொடங்கிட இருக்கிறோம், அதாவது 2021-2022 கல்வியாண்டில் கல்லூரியில் சேரவிருக்கிற மாணவர்களைத் தேர்வு செய்யும் பணிகளை தற்போது தொடங்கிட இருக்கிறோம். இவ்வாண்டு பிளஸ்டு பயின்று கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் மற்றும் கடந்த ஆண்டு பிளஸ்டு முடித்து பொருளாதார குழலால் கல்லூரிச் சேர்க்கை பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும், மேற்படிப்பு படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பொருளாதார, சமூகச் சூழலில் பின்தங்கியவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், வறுமையில் உழல்பவர்கள் மாற்றுத் திறனாளிகள் . விளையாட்டு, கலை என கல்வி இணை செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றவர்கள் கணிதம் மற்றும் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் ஆர்வம் மற்றும் திறன் பெற்ற மாணவர்கள் என மேற்காணும் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளை 'அகரம் விதைத் திட்டம் 2021-க்கு விண்ணப்பிக்க பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்
அகரம் விதைத் திட்டத்திற்கு விண்ணப்பித்திடும் வழிமுறைகள்

1. மாணவர் தன் குடும்பச் சூழலை விளக்கி தன் கைப்பட விண்ணப்பக் கடிதம் எழுதவேண்டும். கடிதத்தில் பின்வரும் தகவல்கள் தவறாது இடம் பெறவேண்டும்.
மாணவர் பயிலும் பள்ளி குறித்த தகவல் (அரசுப் பள்ளி / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் குடும்பத்தில் முதல்தலைமுறை பட்டதாரியா? தாய், தந்தை இருக்கின்றனரா? அவர்கள் செய்யும் வேலை மற்றும் வருவாய் குறித்து மாணவர் அல்லது அவரது உடன் பிறந்தவர்களோ தனியார் கல்வி நிறுவனத்தில் பயில்கிறார்கள் எனில், அவர்களுக்கான கல்விக் கட்டணங்கள் என்ன? எவ்வாறு செலுத்தப்படுகிறது 0 குடியிருக்கும் வீடு குறித்த தகவல் (குடிசை வீடு ஓட்டு வீடு சீட்டு வீடுகான்கீரிட் மெத்தை வீடு அரசாங்கம் கட்டித் தந்த வீடு
2. மாணவரின் தெளிவான வீட்டு முகவரி, தொலைபேசி எண்கள் சரியாக எழுதப்படவேண்டும் 3. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல்
4. பொதுத் தேர்வு மதிப்பெண் சான்று நகல் (+1 இணைய மதிப்பெண் சான்றே இருப்பின் அதன் நகல் அனுப்பலாம்
5. சாதி சான்றிதழ் நகல் மற்றும் குடும்ப அட்டை நகல்
6. விண்ணப்பம் அனுப்பிடும் உறையின் மீது "அகரம் விதைத் திட்டம் 2021 - என குறிப்பிடப்படவேண்டும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews