மங்களகரமான நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 13, 2021

Comments:0

மங்களகரமான நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம்

வணிகவரி மற்றும் பதிவுத்(ஜே2) துறை - மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்கள் செயல்படுவதற்கு அனுமதித்து அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தல் - அறிவுறுத்தங்கள் - வெளியிடப்படுகின்றன
வருவாயை பெருக்கும் நோக்கில் சித்திரை முதல் தேதி (14.4.2021), ஆடிப்பெருக்கு (3.8.2021) மற்றும் தைப்பூசம் (18.12022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்தால், பதிவு பொதுமக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்திட ஏதுவாக இருக்கும் என்றும், அத்தகைய தினங்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்திடவும், அத்தகைய விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு பதிவுச் சட்டத்தின் கீழ் உள்ள Table of Fees இனம் 17(3)-ன் a, b, c-ல் கூறப்பட்டவாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதிக்குமாறு கோரப்பட்டதன் அடிப்படையில், தங்களின் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்ததில், சித்திரை முதல் தேதி (14.4.2021), ஆடிப்பெருக்கு (3.8.2021) மற்றும் தைப்பூசம் (18.1.2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ளவும் மற்றும் அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews