அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவி உயர்வு பெற, இணை பேராசிரியர், முனைவர் பட்டம் பெற்ற மாணவருக்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். இணை பேராசிரியர் பதவி உயர்வு பெற, உதவி பேராசிரியர், முனைவர் படிப்பு மேற்கொள்ளும் மாணவருக்கு மேற்பார்வையாளராக இருக்க வேண்டும் என்ற கூடுதல் தகுதிகளை நிர்ணயித்து 2018ம் ஆண்டு பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்திய மாணவர்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 29
இந்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி பதவி உயர்வு பெற விண்ணப்பித்து நேர்முக தேர்வில் கலந்து கொண்ட கணபதி மலர்விழி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், பதவி உயர்வுக்கான தேர்வு நடைமுறைகள் 2017ம் ஆண்டு முடிவடைந்து விட்ட நிலையில், 2018ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தங்களுக்கு பதவி உயர்வு மறுக்கக் கூடாது என தெரிவித்திருந்தனர்.
ஐ.ஐ.டி.,யில் எம்.ஏ., படிப்பு - விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 31
ஆனால், கூடுதல் கல்வித் தகுதியை நிர்ணயிக்க பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஐசக்மோகன்லால் ஆஜராகி எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். வழக்குகளை விசாரித்த நீதிபதி பார்த்திபன், கூடுதல் கல்வித் தகுதியை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என உத்தரவிட்டார். மேலும், தீர்மானம் நிறைவேற்றப்படும் முன் பதவி உயர்வுக்கான தேர்வு நடைமுறைகளில் கலந்து கொண்டவர்களுக்கு, அப்போது நடைமுறையில் இருந்த தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி, நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.
Search This Blog
Sunday, March 28, 2021
Comments:0
Home
ASSISTANT PROFESSOR
CourtOrder
பேராசிரியர் பதவி உயர்வு கூடுதல் தகுதி தீர்மானம்?: உயர்நீதிமன்றம் உத்தரவு
பேராசிரியர் பதவி உயர்வு கூடுதல் தகுதி தீர்மானம்?: உயர்நீதிமன்றம் உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.