தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல் உள்ளதாக கூறி, அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க ஏதுவாக தனி வாக்குச்சாவடி அமைக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்கு அளிப்பதில் குளறுபடி மாவட்ட ஆட்சியரிடம் ஜேக்டோ - ஜியோ புகார்
ஆனால் இந்த உத்தரவை தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுமென்றே அவமதித்து விட்டதாக கூறி, அதே அமைப்பு, சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்கு பதிவு செய்வதற்காக எடுத்த நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டிருந்தது.
தபால் வாக்குப்பதிவு செய்ய விண்ணப்பித்த 114 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது 0.3 சதவீதம் தான் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், தலைமைத் தேர்தல் அதிகாரியின் மனு திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக தெரியவில்லை எனவும் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
Search This Blog
Tuesday, March 30, 2021
Comments:0
Home
CourtOrder
ELECTION
GOVT EMPLOYEE
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்கு விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்கு விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு
Tags
# CourtOrder
# ELECTION
# GOVT EMPLOYEE
GOVT EMPLOYEE
Labels:
CourtOrder,
ELECTION,
GOVT EMPLOYEE
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.