Breaking

Tuesday, March 16, 2021

டேராடூன் ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பங்களை அனுப்ப அடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள் - டேராடூனில் உள்ள ராஷ்டிரீய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி பருவத்தில் சேருவதற்கானதேர்வு வருகிற ஜூன் மாதம் 5-ந்தேதி நடைபெறும். சென்னையிலும் இதற்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும் எழுத்துத்தேர்வு கணக்கு, பொது அறிவு மற்றும் ஆங்கிலம் ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடை யளிக்க வேண்டும். எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதி யானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் அக் டோபர் மாதம் 10-ந்தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத்தேர்வு உள்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதம் ஆகும். இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை இணை யதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்கள் இரட்டையாக)தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை -600003 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பவேண்டும். மேலும் விவரங்களை ராஷ்டிரீய இந்திய ராணுவ கல்லூரியின் இணையதளத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog