வாக்குச்சாடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி நடைபெறும் மையங்களில் மாற்றம்; அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களிலேயே நேரில் செலுத்திட ஏற்பாடு - செ.வெ.எண் : 64/ மார்ச் நாள் : 29.03.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 29, 2021

Comments:0

வாக்குச்சாடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி நடைபெறும் மையங்களில் மாற்றம்; அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களிலேயே நேரில் செலுத்திட ஏற்பாடு - செ.வெ.எண் : 64/ மார்ச் நாள் : 29.03.2021

செ.வெ.எண் : 64/ மார்ச்
நாள் : 29.03.2021
இராமநாதபுரம் மாவட்டம்
வாக்குச்சாடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி நடைபெறும் மையங்களில் மாற்றம் அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களிலேயே நேரில் செலுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., அவர்கள் தகவல் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் இரண்டு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வருகின்ற 31.03.2021 அன்று மற்றும் 01.04.2021 ஆகிய தேதிகளிலும் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இராமநாதபுரம் இன்பாண்ட் ஜீசஸ் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் (ஏற்கனவே இரண்டு கட்ட பயிற்சி நடைபெற்ற இடங்கள்) நடைபெறும். அதேபோல, திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முன்னதாக சி.கே.மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியிலும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு கமுதியில் உள்ள தனியார் பள்ளியிலும் பயிற்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு திருவாடானை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இராமநாதபுரம் நகரிலுள்ள ஸ்வார்ட்ஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி மற்றும் புனித அந்திரேயா மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இராமநாதபுரம் நகரிலுள்ள செய்யதம்மாள் மெட்ரிக் மேனிலைப்பள்ளியிலும் நடைபெறும். சமூக இடைவெளியைப் பின்பற்றி வகுப்புகள் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக காலை மாலை என இரு அமர்வுகளாக (Sessions) பிரித்து பயிற்சி அளித்திடவும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெறும் இடம், அறை எண், பயிற்சி நேரம் உள்ளிட்ட விபரங்களுடன் உத்தரவு வழங்கப்படும். தபால் வாக்கு கோரிய தேர்தல் பணியாளர்களுக்கு பதிவு தபால் மூலமாக வாக்கு சீட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. 31.03.2021 மற்றும் 05.04.2021 ஆகிய இரு நாட்களிலும் பயிற்சி முடிந்ததும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களிலேயே நேரடியாக செலுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 01.05.2021 வரை வாக்கு சாவடி அலுவலர்கள் தங்களது வாக்குகளை கட்டணமின்றி அஞ்லகம் மூலமாகவும் அனுப்பலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராமநாதபுரம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews